web log free
May 23, 2026

இலங்கை வருகிறார் மைக் பொம்பியோ

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் கொரியாவுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சுதந்திரமான திறந்த இந்திய பசுபிக் வலயத்தை உருவாக்கும் நோக்குடன் அவர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd