தேங்காய் விலை உயர்வு காரணமாக உள்ளுர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தேங்காய் இன்றும் சந்தையில் 150 முதல் 200 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
தற்போதைய சந்தை விலையில் ஒரு தேங்காய் வாங்கி தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதன் மூலம் லாபம் ஈட்ட முடியாது என உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தேங்காய் எண்ணெய்யின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேங்காய் விலை உயர்வின் பின்னணியில் அரிசியின் விலை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆலை உரிமையாளர்களுக்கு 100 ரூபா குறைந்த விலையில் வழங்கி, அரிசியாக மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வது நியாயமற்றது என நாமல் ஓயா விவசாய உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாரிய நெல் உரிமையாளர்கள் கூறுவது போன்று திருத்தம் செய்யக்கூடாது என சிறு மற்றும் நடுத்தர நெல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சதொசவில் அரிசி மற்றும் தேங்காய் போதியளவு இல்லை எனவும் பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.