குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிடிபடும் குரங்குகள் கிரிதலே கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதிகளில் விடப்படவுள்ளன.
இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 4.5 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, நீண்டகாலத்திற்காக குரங்குகளை கட்டுப்படுத்தும் முன்னோடி செயற்திட்டம் ஒன்றே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, கதிர்காமம் ஆலயம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து கடந்த ஓராண்டுக்கு முன்னர் செயற்படுத்திய குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவிக்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் குறைந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த நாட்டில் 25-30 இலட்சம் குரங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் புவியியலாளர் என்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.