web log free
December 22, 2024

அர்ச்சுனா எம்பிக்கு தடை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் என்ற காரணத்திற்காக அன்றி வேறு எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உறுப்பினருக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகியிருந்த உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஒரு இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை இதனைத் தெரிவித்துள்ளது.


அத்துடன், யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரவேசிக்க முடியாது எனவும், அவர் பிரவேசித்தால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்தால் தாக்கவோ துன்புறுத்தவோ இன்றி யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd