தேசிய பொசொன் நோன்மதி பண்டிகை வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அநுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுர ஜயஸ்ரீ மஹாபோதியில் இன்று மாலை பொசொன் வாரத்திற்கான வழிபாடுகள் ஆரம்பமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, போசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு இம்முறை பொலன்னறுவையில் பல்வேறு சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக பிரபாத் அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் அமைக்கப்பட்டுள்ள தானசாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.
அத்துடன், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பொலன்னறுவையில் நடைபெறவுள்ள பொசொன் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கல் விஹாரையை முன்னிலைப்படுத்தியும் பல சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவ்விஹாரையின் ஏற்பாட்டிலான பெரஹர எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, திம்புலாகல பெரஹர எதிர்வரும் 18ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.