பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களுக்காக பதில் அமைச்சர்களாக ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என, சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள போதும், சுகயீனம் அடைந்துள்ள சந்தர்ப்பங்களிலேயே பதில் அமைச்சர்களாக ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டலாம் என, சிரேஷ்ட சட்டத்தரணி அநுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
யாராவது அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தால், வெற்றிடமாகும் அமைச்சு பொறுப்புகள் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு பொறுப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.