web log free
April 03, 2025

கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

 

தெமட்டகொடையிலுள்ள சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வளாகத்துக்குள் நுழைந்து, குழப்பத்தை விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே, எதிர்வரும் 11 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மேற்கண்டவாறு நேற்று (7) உத்தரவிட்டார்.


இதேவேளை, அந்த வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பங்களை விளைவித்த, ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd