web log free
June 05, 2026

கொழும்பில் 12 மணி நேரம் நீர் விநியோக தடை

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள பல பகுதிகளுக்கு நாளை (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்புக்கு நீர் வழங்கும் பிரதான குழாய்வழியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களுக்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சபை மேலும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd