web log free
January 22, 2025

இலங்கைக்கு குவியும் வாழ்த்து!

 

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருக்கும் கலாசார மையத்துக்குத் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் தனது பதிவில் அவர் பகிர்ந்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலாசார மையம், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிகாரபூா்வமாக திறக்கப்பட்டது.

சுற்றுலா ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கலாசார மையத்துக்கு திருவள்ளுவரின் பெயர் சனிக்கிழமை (ஜனவரி 18) சூட்டப்பட்டது.

இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை புத்தசாசனம், மதம், கலாசார அமைச்சா் சுனில் செனவி உள்ளிட்டோர் இந்தப் பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

12 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட இந்தக் கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட இலங்கை பயணத்தின்போது அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழின் பெருமையைப் பரப்புவதில் சாதனை: ஆளுநர் ஆர். என். ரவி

யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்கப்படத்தற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ் மொழி, கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை திருவள்ளுவர் கலாசார மையம் என்று மறுபெயரிட்டிருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் பழமையான மொழியான தமிழையும் அதன் கலாசாரத்தையும் பரப்புவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் முயற்சிகளில் இது மற்றொரு மைக்கல் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last modified on Monday, 20 January 2025 02:58
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd