web log free
February 05, 2025

சதோசவின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

ரூ.1,095 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் உள்ளூர் முந்திரி பருப்பு (கஜூ) ரூ.100 குறைந்து 995 ரூபாய்

ரூ.340 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் சிவப்பு நிற சீனி ரூ.40 குறைந்து ரூ. 300 ஆகவும்,

ரூ.210 ஆக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 180 ரூபாயாகும்.

ரூ.795 ஆக இருந்த ஒரு கிலோ சிவப்பு பட்டாணி (சிவப்பு கௌபி) ரூ.30 குறைந்து ரூ.765 ஆகவும்,

ரூ.960 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் நெத்தலி ரூ.20 குறைந்து 940 ரூபாவாகவும் உள்ளது.

ரூ.845 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் ரூ.15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 830 ரூபாவாகும்,

ஒரு கிலோவின் விலை ரூ. ரூ.655 ஆக இருந்த பாஸ்மதி அரிசியின் புதிய விலை ரூ.645 ஆக உயர்ந்தது.
655 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டதன் மூலம், அதன் புதிய விலை 645 ரூபாயாக மாறியுள்ளது.

240 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 230 ரூபாயாகும்.

290 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பு 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 288 ரூபாகும்.

242 ரூபாயாக இருந்த வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 240 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd