web log free
September 16, 2024

அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெறுகின்றது.

திருவிழா திருப்பலி ஆராதனைகள் இன்று காலை பத்து மணிக்கு தமிழ் - சிங்கள மொழிகளில் இடம்பெற்றது.

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

முன்னதாக, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் நேற்று புதன்கிழமை அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.