இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பொது சேவையை வலுப்படுத்துதல் மற்றும் பொது சேவையின் செலவுகளை நிர்வகிப்பதன் அவசியம் குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தபட்டது.