ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தஜிகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கினைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளதுடன், 3 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளவரும் முக்கிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.