அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பிறகு தேவைப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இறுதி அறிக்கைகளைப் பெற்ற பிறகு, தேவைப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.