இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இது நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்படி அவரை அங்கு கைது செய்ய ஏற்பாடுகள் நடப்பதாகக் குறிப்பிடுகின்றன.