வழங்க திட்டமிடப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அச்சிடும் உபகரணங்கள் கிடைத்தவுடன் யாழ்ப்பாணத்தில்கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவப்படும் என்றும், உள்ளாட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.