web log free
April 05, 2026

அசாத் சாலிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் ஒன்றை
பதிவு செய்துக் கொள்வதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவருக்கு அழைப்பு
விடுத்துள்ளது.

இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு
அவருக்கு பணிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலிக்கு எதிராக, உண்மையின் பாதுகாவலர் என்ற
அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி ப்ரேம்நாத் சி தொலவத்த பதிவு செய்திருந்த
முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd