2019 ஆம் ஆண்டு பிறந்ததன் பின்னர், பாராளுமன்றம் முதன்முறையாக இன்று (08) பிற்பகல் 1 மணிக்கு கூடவிருக்கின்றது.
இதன்போது, தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமாச் செய்த, ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்துக்கு நிரப்பப்பட்ட, சாந்த பண்டார எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதன் பின்னர், ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கான (பட்ஜெட்) நிதியொதுக்கீட்டுச் சட்டமூலமும், பாராளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்படும்.