பொதுமக்கள் பயனடையும் அளவுக்கு மருந்துகளின் விலைகளைக் குறைக்க எதிர்பார்ப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செலவினத் தலைப்பு குறித்த ஆளும் கட்சியின் விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், VAT மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகளுடன், இதற்காக ஒரு தனி சூத்திரம் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மருந்துகளின் தொடர்ச்சியான மற்றும் தரமான விநியோகத்திற்காக அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.