அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் திங்கள் கிழமை இரவு 32 வயது பெண் வைத்தியரை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கல்நேவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவரிடம் இருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், ஏற்கனவே குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.