web log free
May 23, 2026

கடற்படை வீரர் பிணையில் விடுதலை

2008/2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்படை வீரர், நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

11ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

150,000 ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவ​ர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd