தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மனிதர்களால் உணரப்படும் உடல் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயத்தை மேலும் விளக்கி, வானிலை ஆய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றும் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ கூறியதாவது:
"இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம். காரணம், இது முக்கியமாக பருவகால சூழ்நிலை. இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. மனித உடல் வெப்பத்தை உணரும் என்பதால், குறிப்பாக வெளியில் வேலை செய்பவர்கள் அதிக திரவங்கள் மற்றும் தண்ணீரை குடிக்க வேண்டும். முடிந்தவரை, நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்."