ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள், சேறு பூசும் அல்லது தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது எதையும் கொச்சைப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், புத்திசாலிகள் எப்போதும் கொள்கைகளை மட்டுமே பார்ப்பார்கள் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறினார்.
கட்சியின் கொள்கைகளை முடிந்தவரை மக்களிடம் எடுத்துச் செல்லவும், கொள்கைகளை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ கூறினார்.
நெலும் மாவத்தையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.