உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போாட்டியிட அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சில வேட்புமனுக்கள் நாடு முழுவதும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முடியும் வரை குறித்த உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நாளைவரை ஒத்திவைக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை (02) இந்த மனுக்கள் மீது மீண்டும் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் மே 06ஆம் திகதியே நடைபெற இருப்பதால் இந்த உத்தரவு தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது.