உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்புடைய முக்கியமான ஒருவர், தங்களது சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இன்டர்போல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் என்ற 29 வயதுடை இலங்கையர், பயங்கரவாதம் மற்றும் கொலைகள் என்பன தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், தேடப்பட்டு வந்தவர் என இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சம்பவ பதிலளிப்பு குழு ஒன்று நிறுவப்பட்டதாகவும், அதற்கமைய சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாகவும் இன்டர்போல் சுட்டிக்காட்டியுள்ளது.