கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது.
இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அந்தக் காலத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியவில்லை.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து முப்பத்து மூவாயிரத்து ஒருநூற்று எண்பத்தைந்து ஆகும்.