உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்க மாட்டேன் என்ற ஜனாதிபதியின் கூற்றுகள், இந்தத் தேர்தலில் அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்பதை அவர் அறிந்திருப்பதைக் காட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,
"எங்களுக்கு வாக்களித்தவர்களும், கடந்த பொதுத் தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களும் எங்களிடம் உள்ளனர். அவர்கள் இப்போது திசைகாட்டியால் கொஞ்சம் சோர்வடைந்துவிட்டார்கள். அவர்களிடம் பேசி உண்மை நிலைமையை விளக்க முயற்சி செய்யுங்கள்.
இந்த நாட்டின் வாக்காளர்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளை நிராகரித்துவிட்டனர். பொருளாதாரம் சரிந்தபோது, மக்களிடம் எந்தத் தீர்வும் இல்லை, அதனால் அவர்கள் திசைகாட்டியை நோக்கிப் பார்த்தார்கள். ஆனால் திசைகாட்டியிடம் அதற்கும் தீர்வு இல்லை. இப்போது சிலர் அரசாங்கத்தால் சலித்துப் போயிருக்கிறார்கள்."
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.