நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று வரை நாட்டில் 19,724 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், சிறப்பு மருத்துவர் சுதத் சமரவீர கூறுகிறார்.
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 5,175 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில், 2,178 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மருத்துவர் கூறுகிறார்.
தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 95 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.