web log free
May 23, 2026

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நாட்டு மக்களின் அனுமதியைக் கோரும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசெம்பர் 7ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் வகையில், பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விட ஸ்ரீலங்கா ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கோரும் பொதுவாக்கெடுப்பை நடத்தும் இந்த திட்டத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd