web log free
June 19, 2026

மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ள கருத்தில் தவறு இல்லை - அரசாங்கம்

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முறையாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மறந்துவிட்டதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுபோன்ற அறிக்கையை வெளியிட பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு உரிமை உண்டு என்றும் பிரதி அமைச்சர்  தமது பதிலில்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மேலும் தெரிழவித்த பிரதியமைச்சர்:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவது அரசாங்கம் என்ற ரீதியில் எமக்குப் பொறுப்புள்ளது.  குறிப்பிட்ட இலக்கை எம்மால் எட்ட முடிவதில் பின்னடைவு இருந்த போதிலும்  உரிய இலக்கை நோக்கி நாம் செயற்பட்டு வருகிறோம். இதில் தாமதம் ஏற்படுவதில்  எமக்கும் கவலைதான்.  இதுதொடர்பில் பேராயர்  தெரிவித்திருக்கும் கருத்தினால் நாம் மனம் தளரவில்லை. அவர் தெரிவித்துள்ள கருத்தில் தவறு இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு. இதற்காகவே இதுதொடர்பான விசாரணைகளை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd