web log free
August 25, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து!

சமகால அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ள 'வளமான நாடு – அழகான வாழ்வு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கும் இயலுமாகும் வகையில், 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்காக 02 சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd