web log free
June 19, 2026

குளவி கொட்டுக்கு இலக்கான 12 தோட்ட தொழிலாளர்கள்

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள்  குளவி கொட்டுக்கு உள்ளாகி, 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உட்பட 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ தோட்டத்தில், வியாழக்கிழமை (19) தேயிலை செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது, தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து, குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன.

நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளன, தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால், தேயிலை கொழுந்து பறிப்பதை நிர்வாகம், வியாழக்கிழமை (19) நிறுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd