web log free
June 19, 2026

தமிழரசுக்கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகள்

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன்,  அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சி.வீ.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின்  தவிசாளர் தெரிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதற்கு கட்சி சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான நடவடிக்கைகள் எமாற்றத்திற்குரியது.

எனினும், வலி. வடக்கு பிரதேச சபையில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர் தமிழ் தேசியத்தோடு ஒன்றினைந்து செயற்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd