எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜெயவர்தன தெரிவித்தார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை முதல் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் இன்று (01) அது செயல்படுத்தப்படாது என்று நவோமி ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.