2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைத்து, நிபுணர்களின் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகள் பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதுகலை கல்விக்காக வெளிநாடு செல்லும்போது வைத்தியர்கள் மீண்டும் பணிக்கு அழைக்க கிடைக்கக்கூடிய பயிற்சிக்குப் பிந்தைய சேவை பத்திரங்கள் பெரும்பாலும் பயனற்றவை என்பதையும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் சுகாதாரப் பணியாளர்களில் தற்போது 23,000 வைத்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 2,800 பேர் நிபுணர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்காக பெறப்பட்ட தரவுகளின்படி, 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் 1085 வைத்தியர்கள் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர், இதில் 2022 ஆம் ஆண்டில் 477 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 449 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்த ஆய்வில் சிறப்புப் பயிற்சி பெறும் 1085 வைத்தியர்களில் 20 சதவீதம் பேர், முதுகலை சான்றிதழ்களைப் பெற்ற பிறகும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 3,839 வைத்திய பட்டதாரிகள் மற்றும் 75 பயிற்சியாளர்கள் மூன்று ஆண்டுகளில் பிந்தைய பயிற்சி நியமனங்களுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது