அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு நாட்டில் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என்று குருநாகலில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறினார்.
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை கட்டாயமாக்கவும், வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2026 - 2029 காலகட்டத்திற்கான தேர்தல் ஆணையத்தின் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள பங்குதாரர் குழுக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் குருநாகல் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவிடப்படும் பெரும் தொகையைக் கருத்தில் கொண்டு, ஒரு தேர்தலில் அதிகபட்ச நன்மை அடைவதே இந்த முடிவுக்குக் காரணம் என்று தேர்தல் ஆணையர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத் தேர்தல்களுக்கான வைப்புத் தொகையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.