சட்டத்துக்குப் புறம்பாக கடந்த அரசாங்கத்தில் வாகனப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை வெளிச்சத்துக்கு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர்:
சமீப நாட்களாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.
இருவரும் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆட்சியிலிருந்ததால்,ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காது சட்டத்துக்குப் புறம்பாக வாகனத்தை பரிமாறிக் கொண்டனர்.
இவ்வாறான ஊழல் தொடர்பில் முன்னரே ஏன் வெளிப்படுத்தப் படவில்லை எனக் கேட்க வேண்டாம். இரகசியமாக சட்டத்துக்குப் புறம்பாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மரிமாறப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தினர் தமது வியாபாரங்களுக்காக மாத்திரமே ஆட்சி செய்தனர். நாம் அவ்வாறில்லை. மக்களுக்காகவே எமது அரசாங்கம் செயற்படுகிறது.