அரசாங்கம் விதித்துள்ள அதிக இறக்குமதி வரிகள் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஜப்பான்-இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க கூறுகிறார்.
அதன்படி, சுமார் 15 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் இறக்குமதி வரிகளுடன் 6 மில்லியன் வரை அதிகரிப்பதாக ராமநாயக்க சுட்டிக்காட்டுகிறார்.
வாகனங்களை வாங்க விரும்பும் நுகர்வோருக்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.