எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்கான வழிமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களின் பவுசர் வாகனங்களின் உதிரி பாகங்கள் உட்பட, பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் அதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்களின் செலவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மயூரா நெத்திகுமாரகே கூறுகிறார்.