பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்கான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முற்பகல் முதல் அந்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்பகலில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பிரேரணை தொடர்பில் அண்மையில் கூடிய பாராளுமன்ற குழுவில் விவாதிக்கப்பட்டது.
தேசபந்து தென்னக்கோன் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவையனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பிரேரணையே இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது.