web log free
June 19, 2026

கம்பஹாவில் 10 மணிநேர நீர்தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொட வரையிலான குழாய் சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரன்பொகுணகம, பட்டாலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd