web log free
August 28, 2025

மீகொட துப்பாக்கி சூட்டு சந்தேகநபர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். 

கைதான சந்தேகநபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

மீகொட பகுதியில் நேற்று (12) மதியம் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. 

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

பாதுக்கை, வட்டரெக பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காணித் தகராறுகள் தொடர்பாக உயிரிழந்த சாந்த முதுங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடுகள் சிலவற்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd