web log free
August 24, 2025

இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரைக் கொழும்பில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது,  வடக்கு - கிழக்கில் தொடரும் இராணுவத்தினரின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என  சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  மேலும் தெரிவிக்கையில்,

பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின்போது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப் பிரச்சினைகள், இராணுவத் தலையீடு குறித்தும், அதிகளவு இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வடக்கு - கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd