முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று(22) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட வௌிநாட்டு பயணங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.