இந்த ஆண்டின் (2025) முதல் ஏழு மாதங்களில் தனியார் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு 668 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் வாகன இறக்குமதிக்கான செலவு 193 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது.
நாட்டின் மொத்த இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே வாகன இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கும் ஒரு காரணமாகும், இதனால் இந்த ஆண்டின் (2025) முதல் ஏழு மாதங்களில் மொத்த இறக்குமதி செலவினம் 11.8 சதவீதம் அதிகரித்து 11644.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.