web log free
May 23, 2026

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் ரத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு,, இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம், கம்போடியாவுக்கும் லோவோசுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.

எனினும், அவரது இந்தப் பயணத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd