முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க தொழிலதிபர்கள் குழுவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு, மாலபேயில் உள்ள தனது வீட்டை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
பத்தரமுல்லை ஜெயந்திபுராவில் ஒரு தொழிலதிபரும் வீடு வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பொதுஜன பெரமுனவின் குழுவும் அந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்துள்ளது.