web log free
April 05, 2026

‘ஜனாதிபதித் தேர்தலில் இரு தரப்பு போட்டியே இருக்கும்’

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காதவகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டியில்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு பிரதான குழுக்களுக்கிடையில் மட்டுமே போட்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd