ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த “தியாக தீபம்” எனப்படும் திலீபனின் 38 ஆவது நினைவு
தின நிகழ்வுகள் நேற்று (15) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. யாழ்ப்பாணம், நல்லூர் பிரதான வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமகைின. பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துதல்,தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்குதல்,ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை களைதல்,தமிழர் பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவதை நிறுத்துதல் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.