web log free
September 16, 2024

40 ரயில் சேவைகள் ரத்து

ரயில் தொழிற்சங்க உழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை ஆரம்பமாகவிருந்த 40 ரயில் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், யாழ்தேவி ரயில் சேவையும், ஏனைய 9 அலுவலக ரயில் சேவைகளும் இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என ரயில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.